வெலிக்கடை படுகொலை : ஒக்ரோபர் 14ம் திகதி விசாரணை !
Saturday, August 31st, 2019வெலிக்கடை சிறைச்சாலை படுகொலை தொடர்பாக மூன்று சந்தேகநபர்களிற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, ஒக்ரோபர் 14ம் திகதி விசாரணை செய்ய திகதியிடப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது, எதிரிகளாக பெயரிடப்பட்டவரகளில் ஒருவரான சிறை புலனாய்வு அதிகாரி இந்திக சம்பத் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைக்காமல் வழக்கை தொடர நீதிமன்றம் உத்தரவிட்டது.
அத்துடன் வெளிநாடுகளுக்குச் சென்றதாக நம்பப்படும் சந்தேகநபர்களை கைது செய்ய பிடியாணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதேவேளை அதற்கு முன்னதாக, இந்த வழக்கு தொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் நியோமல் ரங்கஜீவ மற்றும் முன்னாள் சிறை கண்காணிப்பாளர் எமில் ரஞ்சன் லமஹேவா ஆகியோரிடம் குற்றப்பத்திரம் கையளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வழக்கின் நான்கு சாட்சிகளையும் அடுத்த விசாரணையின் போது முன்னிலையாக நீதிபதி உத்தரவிட்டார்.
கடந்த 2010 ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் கைதிகள் கலவரத்தில் ஈடுபட்டதாக கூறி , கைதிகள் மீது அதிரடிப்படையினர் கொடூர தாக்குதலை மேற்கொண்டனர்.
இந்த தாக்குதலில் 27 கைதிகள் கொல்லப்பட்டிருந்த நிலையில், அப்போது, படைகளிற்கு உத்தரவிடும் உச்சபச்ச அதிகாரத்துடன், கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்ப செயலாளராக பதவிவகித்து வந்மையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|