வெங்காய உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி…!

Tuesday, September 17th, 2019


பெரிய வெங்காய பயிர் செய்கையினால் உற்பத்தியாளர்களுக்கு குறிப்பிடத்தக்க இலாபம் கிடைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரிய வெங்காயத்திற்கான இறக்குமதி வரி அண்மையில் அதிகரிக்கப்பட்டதன் காரணமாக, உள்ளூர் உற்பத்தியாளர்கள் அதிக இலாபம் அடைந்துள்ளனர். உள்ளுர் சந்தையில் சிறந்த விலை கிடைப்பதாக கூறப்படுகிறது.

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் பெரிய வெங்காயம் ஒரு கிலோகிராம் 105 ரூபா முதல் 110 ரூபா வரை விற்பனை செய்யப்படுவதாக உள்ளுர் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

கெட்டலவ, கொக்கவெல, கிவுலேகட மற்றும் மிஹிந்தலை ஆகிய பகுதிகளில் பெரிய வெங்காயம் வெற்றிகரமாக அறுவடை செய்யப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, அநுராதபுரம் மாவட்டத்தில் 1700 ஏக்கரில் பெரிய வெங்காயம் செய்கையிடப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது

Related posts: