வீழ்ச்சி அடைந்த பாதுகாப்பை மீண்டும் கட்டியெழுப்புவேன் – கோட்டாபய ராஜபக்ஷ!

Monday, September 9th, 2019


நாட்டின் பாதுகாப்பு நிலைமையை உறுதி செய்வது தற்போதைய அரசின் பொறுப்பு என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

“பலம்பெரும் செயற்திட்டம்” என்ற எண்ணக்கருவின் கீழ் இன்று கொழும்பு ஷங்ரில்லா ஹோட்டலில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கம் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பான பொறுப்பை கைவிட்டு உள்ளதாகவும் அதை 2005 ஆம் ஆண்டு தாங்கள் செய்ததாகவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார். வீழ்ச்சி அடைந்துள்ள நாட்டின் பாதுகாப்பை தனது ஆட்சியின் ஊடாக மீண்டும் கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கை எடுப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்

Related posts: