வாக்ளிக்க தகுதி பெற்றுள்ளோர் பெயர் பட்டியல் வெளியீடு!

2019 ஆம் ஆண்டில் வாக்ளிக்க தகுதி பெற்றுள்ளோரின் பெயர் பட்டியலை காட்சிப்படுத்தும் பணிகள் நேற்றுமுதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
நாடு முழுவதுமுள்ள அனைத்து கிராம சேவகர் அலுவலகங்களிலும், பிரதேச செயலங்களிலும் மற்றும் மாவட்ட செயலகங்களிலும் இந்த பெயர்பட்டியல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இதில் வாக்களிக்க தகுதி பெற்றோரினதும், தகுதி பெறாதவர்களினதும் பெயர்கள் காணப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இவ்வாறு காட்சிப்படுத்தப்பட்டுள்ள பெயர் பட்டியல் தொடர்பான முறைப்பாடுகளை தெரிவிக்கம் சந்தர்ப்பம் உள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
Related posts:
சென்னை சென்ற விமானங்கள் கட்டுநாயக்காவில் தரையிறக்கம்!
இந்திய ஆசிரியர்கள் தொடர்பில் கல்வியமைச்சரின் தெளிவுபடுத்தல்!
சீனாவின் ‘பராக்கிரமபாகு’ இலங்கை கடற்படையில் இணைவு!
|
|