வாக்களிக்கும் போது அவதானத்தில் கொள்க – தேர்தல்கள் ஆணையாளர்!

Saturday, November 2nd, 2019


இம்முறை ஜனாதிபதி தேர்தலில் நீண்ட வாக்குசீட்டு பயன்படுத்தப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் நடைபெற்ற ஊடக சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.இதன் போது இம்முறை தேர்தலில் பயன்படுத்தப்படவுள்ள 26 அங்குல நீளம் கொண்ட வாக்குச்சீட்டை மக்களுக்கு காண்பித்தார்.

இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் அதிகளவிலான வேட்பளார்கள் போட்டியிடுகின்றனர்.இதன் காரணமாகவே 35 வேட்பாளர்களினதும் பெயர்களை உள்ளடக்கி 26 அங்குல அளவில் மிக நீண்ட வாக்குசீட்டு தயாரிக்கப்பட்டுள்ளது.

இதே சமயம் வாக்களிக்கும் போது வாக்குச்சீட்டு மறைப்பையும் தாண்டி வெளியில் தெரியும் என்பதால் இம்முறை தேர்தலில் வாக்களிக்கும் வாக்காளர்கள் மறைப்பு பெட்டியின் குறுக்காக வாக்குச்சீட்டினை வைத்து வாக்களிக்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Related posts: