வழமைக்கு திரும்பியது ஆட்பதிவு திணைக்களம்-குடிவரவு, குடியகல்வு திணைக்களங்களின் சேவைகள் !

Wednesday, October 2nd, 2019


ஆட்பதிவு திணைக்களம் மற்றும் குடிவரவு குடியகல்வு திணைக்களங்களில் வழமையான பணிகள் இடம்பெற்றுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், ஆட்பதிவு திணைக்களத்தில் ஒரு நாள் தேசிய அடையாள அட்டை விநியோகிக்கும் பணிகள் வழமை போல் இடம்பெறுவதாக ஆட்பதிவு திணைக்கள ஆணையார் நாயகம் வியானி குணதிலக்க தெரிவித்துள்ளார்.

ஒரு நாள் சேவையின் கீழ் நேற்றைய தினம் மாத்திரம் 600 தேசிய அடையாள அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் 1,000 இற்கு மேற்பட்டோர் ஒரு நாள் சேவையின் கீழ் தேசிய அடையாள அட்டையை பெற்றுக் கொள்வதற்காக விண்ணப்பித்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இவர்கள் அனைவருக்கும் தேசிய அடையாள அட்டைகள் வழங்கப்படுகின்றன. இதேவேளை குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் சனத் ரத்நாயக்க கருத்து தெரிவிக்கையில், வெளிநாட்டு கடவுச்சீட்டுக்கள் உள்ளிட்டவை வழமை போன்று விநியோகிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

Related posts: