வலிகாமம் தெற்கு பொது அமைப்புகளுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினரால் உதவித் திட்டங்கள் வழங்கிவைப்பு!

Tuesday, December 17th, 2019


வலிகாமம் தெற்கு பிரதேசத்திலுள்ள ஒரு தொகுதி பொது அமைப்புகளுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியால் தளபாடங்கள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

குறித்த பகுதியின் பொது அமைப்புகள் கட்சியின் குறித்த பிரதேச நிர்வாகத்தினரிடம் விடுத்திருந்த கோரிக்கைகளுக்கு அமைவாக தெரிவு செய்யப்பட்ட ஒரு தொகுதி பொது அமைப்பகளுக்ளின் தேவையை பூர்த்தி செய்துகொடுக்கும் முகமாக கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் மற்றும் நீரியல்வள மூல அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களது பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் இருந்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பொருட்களை கொள்வனவு செய்வதற்கான நிதி வழங்கப்பட்டது.

இதன் பிரகாரம் குப்பிளான் ஒளி நிலா விளையாட்டுக் கழகம், உடுவில் புதுமடம் வைகறை விளையாட்டுக் கழகம், புன்னாலைக்கட்டுவன் ஈவினை கலைமகள் விளையாட்டுக் கழகம் ஆகியவற்றுக்கு விளையாட்டு உபகரணங்களும் புன்னாலைக்கட்டுவன் மத்தி கற்பகவிநாயகர் சிறுவர் முன்பள்ளி சிறார்களுக்கு பான்ட் இசைக்கருவிகளும் வழங்கிவைக்கப்பட்டன.

தெரிவு செய்யப்பட்ட பொது அமைப்பகளுக்கான உபகரணங்கள் வழங்கிவைக்கும் நிகழ்வு நேற்றையதினம் வலி தெற்கு பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

இதன்போது பிரதேச சபை அதிகாரிகளுடன் கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஸ்ணன், கட்சியின் வலி தெற்கு பிரதேச நிர்வாக செயலாளர் அருணாசலம் சந்திரன் (வலன்ரயன்) மற்றும் கட்சியின் குறித்த பிரதேச உதவி நிர்வாக செயலாளர் அரிகரன் ஆகியோருடன் கட்சியின் பிரதேச உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டு உபகரணங்களை குறித்த நிர்வாகத்தினரிடம் வழங்கி வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: