வலிகாமம் கிழக்கில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் இளைஞர் அணி உதயம்!

Monday, December 9th, 2019


முழுமையாக மக்கள் மயப்படுத்தப்பட்ட ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயற்பாடுகளை மேலும் விரிவாக்கம் செய்யும் முகமாக இளைஞர் அணி கட்டமைப்பு கட்சியின் வலிகாமம் கிழக்கு நிர்வாக செயலாளர் இராமநாதன் ஐங்கரன் முன்னிலையில் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.

குறித்த அங்குரார்ப்பணம் கட்சியின் கோப்பாய் பிரதேச அரசியல் அலுவலகத்தில் நேற்றையதினம் நடைபெற்றது.

இதன்போது உரையாற்றிய இராமநாதன் ஐங்கரன்  –

எமது சந்ததியின் எதிர்காலத்தை சிறந்தமுறையில் வழிநடத்தி செல்ல வேண்டுமானால் அதில் இளைஞர்களின் பங்களிப்பு அவசியமாக உள்வாங்கப்பட வேண்டும். அதனூடாகவே புதிய மாற்றங்களை எம்மால் உருவாக்கிக் கொள்ள முடியும்.

இங்கு குழுமியிருக்கும் நீங்கள் ஒவ்வொருவரும் யுத்த காலத்தில் இங்கிருந்து கல்வி கற்று இம் பிரதேசத்திலேயே வாழ்ந்தவர்கள்.

ஆனால் இதர தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பிள்ளைகள் ஐரோப்பிய நாடகள் பலவற்றுக்கும் சென்று கல்வி கற்று சுகபோகங்களை அனுபவித்துவிட்டு யுத்தம் நிறைவுக்கு வந்தபின்னர் மிண்டும் இங்கவந்து தேர்தலில் போட்டி போட்டு பதவிகளை பெற்று உங்களை வழிநடத்த முயல்கின்றனர். ஆனால் இங்கிருந்து மக்களின் துன்ப துயரங்களை பார்த நீங்கள் ஏன் அரசியலில் ஈடுபட பின் நிக்கின்றீர்கள்?

நாங்கள் உங்களை ஒருபோதும் எமது சுயநலன்களுக்காக பயன்படுத்தப் போவதில்லை. நாங்கள் இந்த இளைஞர் அணியை கட்டமைப்பது ஒவ்வொரு இளைஞர்களுக்கும் தலைமைத்தவத்தை நோக்கி பயணிப்பதற்கான வழியை காட்டுவதற்காகத்தான்.

ஆனாலும் அந்த இளைஞர்களிடம் நாம் எதிர்பார்ப்பத மக்களுக்கான சேவைகளையும் குறிப்பாக கலாசாரங்கள் எமது பண்பாடுகளை வளர்பவர்களாகவும் அவற்றைப்  பாதுகாக்கின்றவர்களாகவும் இருந்து செயற்பட  வேண்டும் என்பதையே.

இன்று இளைஞர் மத்தியில் பல்வேறு தவறான பழக்கவழக்கங்கள் புகுத்தப்பட்டு அவர்களை தவறான வழிமுறை நோக்கிச் செல்ல தூண்டப்படுகின்றனர். அதற்கு ஏதுவான சந்தர்ப்பங்களும் திட்டமிட்ட வகையில் சில விசமிகளால் உருவாக்கி கொடுக்கப்படும் வருகின்றது.எனவே இது தொடர்பாகவும் மக்கள் மத்தியிலும் இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம்.

நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவர்கள் வெற்றி பெறுவார் எனத் தெரிந்தும் தமது சுயலாப அரசியலுக்காக மக்களை பிழையாக வழி நடத்திவிட்டு மீண்டும் தமது சுயலாபத்திற்காக அரசாங்கத்துடன் இணைந்து ஆட்சியில் பங்கெடுக்க தயார் எனக் கூறிவருகின்றனர் தமிழ் தேசிய கூட்டமைப்பினர். இவர்களுடைய பொய் வாக்குறுதிகளை நம்பி இன்று மக்கள் நடுத் தெருவில் நிற்கின்றார்கள். எனவே மக்கள் மத்தியில் சரியான தெளிவான கருத்தை கொண்டு செல்ல வேண்டியது இந்த இளைஞர் அணியினுடைய கடமையாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts: