வறிய நாடுகளின் தரவரிசையில் இலங்கை 36வது இடத்தில்!
Friday, October 11th, 2019உலகில் வறிய நாடுகளின் புதிய அறிக்கையை போகஸ் இக்கனோமிக் என்ற பொருளாதார ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ளது. 126 நாடுகளின் மொத்த தேசிய உற்பத்தியை கவனத்தில் கொண்டு இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், உலகில் வறிய நாடுகளின் பட்டியலில் முதலாவது இடத்தை கொங்கோ குடியரசு பெற்றுள்ளது. இரண்டாவது இடத்தில் மொசாம்பிக் மற்றும் உகண்டா நாடுகள் இடம்பெற்றுள்ளன.
உலகில் வறிய நாடுகளின் பட்டியலில் இலங்கை 36வது இடத்தில் உள்ளது. இந்த நிறுவனம் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையில் இலங்கைக்கு இதே இடம் கிடைத்திருந்தமை முக்கியமானது. இந்த பட்டியலில் இந்தியா 19வது இடத்தில் இருப்பதுடன் பாகிஸ்தான் 12வது இடத்தில் உள்ளது. அமெரிக்கா 121 இடத்திலும் ரஷ்யா 71 வது இடத்திலும் சீனா 69வது இடத்திலும் உள்ளன.
Related posts:
விரைவில் இலகு ரக ரயில் சேவைக்கான நிர்மாணப் பணிகள்!
கொழும்பில் உள்ள அனைவருக்கும் பி.சி.ஆர்.பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை - கொழும்பு மாவட்ட செயலாளர் அறிவ...
ரெட் விங்ஸ் விமானம் மத்தளவுக்கு சேவைகளை ஆரம்பித்தது - முதல் விமானம் தரையிறங்கியது!
|
|