வதந்திகளை நம்பி அச்சமடைய வேண்டாம் -, பெற்றோரிடம் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் முக்கிய கோரிக்கை!

Friday, May 31st, 2019

பாடசாலைகளுக்கு ஆகக்கூடிய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதால், வதந்திகளை நம்பி அச்சமடைய வேண்டாம் என பாடசாலை மாணவர்களிடமும், பெற்றோரிடமும் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பொலிஸ் அத்தியட்சகருமான ருவான் குணசேகர கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் –  இராணுவத்தினர் மற்றும் சிவில் பாதுகாப்பு பொலிஸாரால் பாடசாலைகளுக்கு ஆகக் கூடுதலான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக தேவைக்கமைய சில பாடசாலைகளுக்குக்கு விஷேட பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் சில பாடசாலைகளுக்கு நடமாடும் பொலிஸ் பாதுகாப்பு சேவை வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறான நடவடிக்கைகளின் மூலம் நாட்டில் உள்ள சகல பாடசாலைகளிலும் முழுமையான பாதுகாப்பை உறுதி செய்துள்ளோம். இவ்வாறான நிலையில் வதந்திகளை நம்பி அச்சமடைய தேவையில்லை என குறிப்பிட்டுள்ளார்.


ஓய்வு பெற்ற 50 படை வீரர்கள் பேருக்கு தொழில்நுட்ப அதிகாரிகள் நியமனம்!
உரமானியத்தை மாத்திரம் வழங்கி விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த முடியாது!
பிணையில் வந்தவரே சங்குவேலி வாள்வெட்டின் சூத்திரதாரி -    மானிப்பாய் பொலிஸார்!
அபிவிருத்தியாகிறது பால் சேகரிக்கும் மத்திய நிலையங்கள்!
லைசன்ஸ் இன்றி மதுபோதையில் வாகனம் செலுத்தியவர் சிறைக்கு!