வடக்கு மாகாண ஆளுநர் அலுவலக கடிதத் தலைப்பிட்டு நியமனக் கடிதம்: சட்டவிரோதம் என சுகாதார சிற்றூழியர்கள் யாழ்ப்பாணத்தில் போராட்டம்!
Saturday, November 23rd, 2019நீண்டகாலமாக சுகாதார தொண்டர்களாக பணியாற்றிய அதிகமானோர் புறக்கணிக்கப்பட்டு ஒரு சிலரது நலன்கருதியதாக சில தினங்களுக்கு முன்னர் வடக்கு ஆளுநர் அலுவலக கடிதத் தலைப்பில் நியமனம் வழங்கப்பட்டுள்ள நியமனத்தை சட்டவிரோதமானது என அறிவித்து நிறுத்துமாறு பாதிக்கப்பட்ட சுகாதார தெண்டர்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
யாழ். மாவட்ட செயலகம் முன்பாக இன்று மதியம் ஒன்று திரண்ட நூற்றுக்கணக்கான நியமனத்தில் உள்வாங்கப்படாது பாதிக்கப்பட்ட சுகாதார தொண்டர்கள் வடக்கு மாகாண ஆளுநருக்கு மகஜர் ஒன்றையும் கையளித்துள்ளனர். அத்துடன் குறித்த மகஜரின் பிரதி ஒன்று கடற்றொழில் மற்றும் நீரியல் வள மூலதன அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கும் வழங்கியிருந்தனர்.
முன்பதாக சுகாதார தொண்டர்களாக கடமையாற்றியவர்களுக்கான நேர்முகத் தேர்வு ஒன்று நடத்தப்பட்டு பின்னர் அதில் தவறுகாணப்பட்டு மீளவும் நேர்முகத் தேர்வு நடைபெற்றது. இதில் 800 பேர் உள்வாங்கப்பட்டிருந்தனர். மேலும் பலர் விடுபட்டிருந்தமையை அடுத்து அவர்களும் உள்வாங்கப்பட்டு புதிய பட்டியலில் 950 க்கும் சற்று அதிகமானோர் இணைக்கப்படடிருந்தனர்.
தற்பொழுது புதிய அரசு அமைந்த பின்னர் நியமனங்கள் எதுவும் வழங்கக் கூடாது என்று உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில் நூற்றுக்கணக்கானவர்களுக்கு தன்னிச்சையான முறையில் நியமனங்கள் வழங்கப்படுவதாக கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வட மாகாணத்தில் ஆளுநர் இல்லாத சூழலில் சுகாதார தொண்டர்களுக்கான நியமனக் கடிதம் ஒன்று நேற்றையதினம் (22.11.2019) ஆளுநர் அலுவலகத்தினால் வழங்கப்பட்டுள்ளது. இந்நடவடிக்கையானது சட்டத்திற்கு முரணானதாகும். எனவே இவ் நியமனக் கடிதத்தை மீளப்பெற்று புதிய நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும் என அவர்கள் கோரிக்கை முன்வைத்திருந்தனர்.
Related posts:
|
|