வடக்கின் ரயில் பயண வேகத்தை குறைக்க முயற்சி!

வடக்கு மாகாணத்தில் சேவையில் ஈடுபடும் ரயிலின் வேகத்தை மணிக்கு 40 கிலோ மீற்றர் வேகத்தில் குறைப்பதற்கு போக்குவரத்து அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்த தீர்மானத்திற்கு பயணிகள் கடுமையாக எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.
வடபகுதியில் ஏற்படும் விபத்துக்களை குறைக்கும் நோக்கில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. எனினும் இதன் பின்னணியில் சூழ்ச்சி நடவடிக்கை ஒன்று உள்ளதாக தெரிய வருகிறது.
கொழும்பு – யாழ்ப்பாணத்திற்கு இடையில் முன்னெடுக்கப்படும் அதிசொகுசு பேருந்து சேவையில் சரிவு நிலை ஏற்பட்டுள்ளது. அதனை சரி செய்யும் நோக்கில் இவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
எப்படியிருப்பினும் இவ்வாறான தீர்மானம் காரணமாக நாட்டின் பொதுப் போக்குவரத்திற்கு பாரிய சிரமம் ஏற்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.
Related posts:
ஜனாதிபதி உத்தரவு - அத்தியாவசிய பொருட்கள் மற்றும் ஏனைய சேவைகளை வழங்குவது குறித்து வெளியானது அதிவிசேட...
கடன் மறுசீரமைப்புச் செயற்பாட்டில் உள்நாட்டுக் கடனில் எந்தவிதமான குறைப்பும் இருக்காது - நிதி இராஜாங்க...
உலகளாவிய சவால்களுக்கு முகங்கொடுக்கக்கூடிய நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்ற கல்வி முறையொன்று நாட்டில் அற...
|
|