ரஞ்சித் சியம்பலாபிட்டியவும் ஜனாதிபதி ஆணைக்குழுவில்!

Wednesday, September 25th, 2019

மின்சக்தி மற்றும் மீள்புதுப்பிக்கதக்க சக்தி முன்னாள் அமைச்சர் ரஞ்ஜித் சியம்பலாப்பிட்டிய, அரச நிறுவனங்ளில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு இன்று (25) அழைக்கப்பட்டுள்ளார்.

இலங்கை மின்சார சபைக்கு, மின்சாரக் கொள்வனவு மேற்கொண்ட சந்தர்ப்பத்தில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பிலான விசாரணைக்கு அவர் அழைக்கப்பட்டுள்ளார்.

அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவினால் அமைச்சரவையில் சமர்பிக்கப்பட்ட பத்திரத்தின் அடிப்படையில் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

மின்சாரக் கொள்வனவின்போது இடம்பெற்ற முறைகேட்டினால் மின்சாரசபைக்கு சுமார் 2 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் சம்பிக்க ரணவக்க சுட்டிக்காட்டியுள்ளார். இந்த விடயம் தொடர்பில் மின்சக்தி அமைச்சின் செயலாளர் சுரேன் பட்டகொட, ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஏற்கனவே சாட்சியமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts: