யாழ் மாநகரப் பகுதியில் டெங்குத் தொற்று அதிகரிப்பு !

Thursday, October 17th, 2019


யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் டெங்குத் தொற்று திடீரென அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து அந்தந்த பொதுச் சுகாதார பரிசோதகர்  பிரிவுகளில் நுளம்புக்கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

நாவாந்தறைப் பிரதேசத்தின் பொதுச் சுகாதாரப்பிரிவில் டெங்குக் கட்டுப்பாட்டு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் நேற்று இடம்பெற்றன. இலங்கை செங்சிலுவைச் சங்கத் தொண்டர்கள், சமூக அமைப்புப் பிரதிநிதிகள் சுகாதாரப் பிரிவினர், பாடசாலை மாணவர்கள் இணைந்து குறித்த பகுதியில் துப்பரவு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

கொட்டடி நமசிவாயம் வித்தியாலயம், நாவாந்துறை கத்தோலிக்கப் பாடசாலை, ஒஸ்மானியாக் கல்லூரி, மற்றும் கஜித கல்லூரி உட்பட மற்றும் பொது இடங்களில் துப்புரவு மற்றும் டெங்குக்கான விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. நாவாந்துறைப்பிரதேசத்தில் இதுவரைக்கும் ஐந்து பேர் டெங்குத் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனையடுத்து டெங்கு ஒழிப்பு செயற்திட்டங்கள்  முன்னெடுக்கப்பட்டன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை டெங்கின் தாக்கம் காணப்படும் மாநகரப் பிரதேசத்தில் குறிப்பிட்ட இடங்களில் நுளம்புக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று சுகாதாரப்பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

Related posts: