யாழ் பல்கலையில் தடை: புதிய நடைமுறை அமுல்!

Saturday, August 17th, 2019


யாழ் பல்கலைக்கழகத்தின் சிற்றுண்டி சாலையில் பொலித்தீனுக்கு தடைவிதிக்கபட்டு அதற்கு பதிலாக வாழையிலை பயன்படுத்தும் நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது.பிளாஸ்டிக் பொருட்களை இல்லாமல் செய்து உக்க கூடிய பொருட்களை பயன்படுத்துவதன் மூலம் சூழல் சமநிலையை நாம் பேண முடியும்.

இதன் மூலம் உள்ளூர் பொலித்தீன் பாவனையை கட்டுப்படுத்தும் முகமாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக பிரதான சிற்றுண்டி சாலைகளில் பொலித்தீன் மற்றும் லஞ்சீற் தடை செய்யப்பட்டுள்ளது.

அதற்குப் பதிலாக வாழையிலை, தாமரை இலையில் உணவு பரிமாறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: