யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் புறக்கணிப்பு!

Thursday, August 15th, 2019


மாணவர்களின் நலன் சார்ந்து 3 கோரிக்கைகளை முன்வைத்து யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இன்று 15 ஆம் திகதி வியாழக்கிழமை தமது கல்வி நடவடிக்கைகளைப் புறக்கணிக்க உள்ளதாக அறிவித்துள்ளனர்.

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் யாழ்ப்பாண பல்கலைக்கழக தகுதி வாய்ந்த அதிகாரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தின் மூலம் இந்த விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் பட்டக் கல்வியை நிறைவு செய்த பல மாணவர்களுக்கு இது வரை பட்டமளிப்பு நடாத்தப்படவில்லை.  இதற்கு வேந்தர் நியமனம் செய்யப்படாமை காரணமாகச் சொல்லப்படுகிறது.

எனவே, உடனடியாக வேந்தர் நியமனத்தை விரைவாக நடாத்துவதன் மூலம் பட்டமளிப்பு விழாவை நடாத்த வேண்டும் என்றும், 3 மாத காலத்துக்கு மேலாக வெளியிடப்படாமல் இருக்கும் பரீட்சை முடிவுகளை வெளியிட வேண்டும் என்றும் குறிப்பிட்டு, 15 ஆம் திகதி வியாழக்கிழமை தமது கல்வி நடவடிக்கைகளைப் புறக்கணிக்க உள்ளதாக அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


வடமாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக தொழில்நுட்பக் கல்லூரியில் கற்று வெளியேறிய மாணவர்கள் கவனயீர்ப்புப்  ப...
வடக்கும் கிழக்கும்  இணைவது சாத்தியமாகாது - அமைச்சர் கிரியெல்ல!
அரச வைத்திய சங்கத்தின் தலைவராக மீண்டும் அனுருத்த!
இலங்கை - மாலைதீவு ஜனாதிபதிகளுக்கிடையே சந்திப்பு!
பாரதத்தின் பிரதமராக பதவியேற்றார் நரேந்திர மோடி!