யாழிலிருந்து வருட இறுதிக்குள் விமான சேவை !

பலாலியில் இருந்து இந்தியாவிற்கான விமான சேவைகளை இவ்வருட இறுதிக்குள் ஆரம்பிக்க எண்ணியுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டில் பாரிய அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கபட்டுள்லதாகவும், அந்தவகையில் சர்வதேசத்தின் நிதி உதவியின் கீழ் மட்டக்களப்பிலும் யாழ்ப்பாணத்திலும் சர்வதேச விமான நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவுக்கு சென்று வரக்கூடிய வகையில் தற்போது பலாலி விமான நிலையம் அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்ற நிலையில், அங்கிருந்து இந்தியாவுக்கான விமான சேவைகளை ஆரம்பிக்க எண்ணியுள்ளதாகவும் பிரதமர் கூறியுள்ளார். அதனை அடுத்து , மட்டக்களப்பிலும் சர்வதேசத்தின் நிதி உதவியுடன் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்போம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதோடு நாட்டை தாங்க ள் பொறுப்பெடுக்கும் போது, நாட்டில் ஜி.எஸ்.பி. வரிச்சலுகை இருக்கவில்லை என்றும், எந்தவொரு நாடும் தமக்கு கடன் தருவதற்கு விரும்பவில்லை என்றும், ஆனால் தற்போது அனைத்தையும் தாங்கள் சரி செய்துள்ளதாகவும் ரணில் கூறியுள்ளார்.
இவ்வாறு தாம் மக்களின் தேவைகளை நிறைவேற்றும் போது, தம்மை விமர்சிப்பவர்களே அதிகமாக உள்ளதாகவும், எனினும் விமர்சனங்களைப் பொருட்படுத்தாது தாம் மக்களுக்கான பணிகளை முன்னெடுத்துச் செல்வதாகவும் பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்
Related posts:
|
|