மேலும் நான்கு புதிய ஜனாதிபதி வேட்பாளர்கள் கட்டுப்பணங்களை செலுத்தினர்!

Tuesday, October 1st, 2019

ஜனாதிபதி தேர்தலுக்காக அங்கீகரிக்கப்பட்ட கட்சி மற்றும் சுயாதீன குழுக்களை அங்கத்துவப்படுத்தும் 4 வேட்பாளர்கள் நேற்று கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.

தேர்தல்கள் ஆணைக்குழு இதனை தெரிவித்துள்ளது.

இதற்கமைய இதுவரை அங்கீகரிக்கப்பட்ட 9 அரசியல் கட்சிகளும் 4 சுயாதீன குழுக்களும் தங்களது வேட்பாளர் சார்பில் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் வேட்பாளர்கள் காட்சிப்படுத்தியுள்ள சுவரொட்டிகள் மற்றும் பதாதைகள் என்பவற்றை அகற்றுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு கட்சிகளின் செயலாளர்களை அறிவுறுத்தியுள்ளது.’

இதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்புக்கு விண்ணப்பிப்பதற்கான காலம், இந்த மாதம் 4ம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது

Related posts:

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் நவீனமயப்படுத்தப்பட்ட கதிரியக்கச் சிகிச்சைப் பிரிவு இயங்க முடியாத நி...
புதிய பயங்கரவாதத் தடைச்சட்டம் மிகவும் ஆபத்தானது - முன்னிலை சோசலிச கட்சியின் பேச்சாளர்!
ஊரடங்கு சட்ட நடைமுறைகள் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் : அத்தியாவசிய தேவையின்றி வெளியில் செல்ல வேண்...