முறைகேடுகளை தவிர்க்க நடவடிக்கை – தேர்தல்கள் ஆணைக்குழு!

Thursday, September 26th, 2019


எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வாக்குகளை பயன்படுத்துவதில் முறைகேடுகள் இடம்பெறுவதை தவிர்ப்பதற்காக உயிரிழந்த மற்றும் வெளிநாடுகளில் உள்ள வாக்காளர்களின் தகவல்களை பெற்றுக்கொள்வதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இதற்கு அமைவாக 2018 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பில் பெயர் உள்வாங்கப்பட்ட வாக்காளர்களின் மத்தியில் உயிரிழந்த அல்லது வெளிநாடுகளில் உள்ள வாக்காளர்களின் தகவல்களை ஒக்டோபர் மாதம் 05 ஆம் திகதிக்கு முன்னர் அறிவிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு கேட்டுக்கொண்டுள்ளது.

இந்த தகவல்களை குடியிருப்பாளர் பிரதேசத்திற்கு அமைவான மாவட்ட தேர்தல் அலுவலகத்திற்கு அல்லது பிரதேச, கிராம உத்தியோகத்தர்களிடம் அறிவிக்க முடியும்.

Related posts: