மீறினால் கடும் நடவடிக்கை – மஹிந்த தேசப்பிரிய !

Saturday, October 5th, 2019


ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்தமை தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கப்பட்டது.

வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில், அது வாக்களிப்பு நிலையங்களுக்கு பொறுப்பாகவுள்ள அதிகாரிகள், கிராம உத்தியோகத்தர்கள், வாக்களிப்பு நிலையங்களை அமைப்பவர்கள், வாக்கெண்ணும் அதிகாரிகளுக்கு சிரமமாக இருக்கும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டார்.

வேட்பாளர் ஒருவர் வாக்களிப்பு நிலையத்திற்கு இரண்டு பிரதிநிதிகளை அனுப்ப முடியும். 25 வேட்பாளர்கள் என்றால், 50 பேர். வாக்கெண்ணும் நிலையங்களில் 5 நபர்கள் வீதம் 25 வேட்பாளர்களுக்கு 125 பேர் காணப்படுவார்கள்.

வாக்குகளை எண்ணுவதற்கு 75 அதிகாரிகளை ஈடுபடுத்த வேண்டும். 200 பேர் இருக்கக்கூடிய மண்டபமொன்றைத் தேட வேண்டும். கொழும்பிலுள்ள பாடசாலைகளில் பெரிய வகுப்புக்களை நாம் தற்போது தேடுகின்றோம்

என மஹிந்த தேசப்பிரிய மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, தேர்தல் சட்டங்களை மீறுதல் மற்றும் பிரசார நடவடிக்கைகளின் போது அமுலிலுள்ள சட்டங்கள் தொடர்பிலும் ஆணைக்குழுவின் தலைவர் தெளிவூட்டினார்.

நியமனங்கள் தொடர்பில் எமது அனுமதியைப் பெற வேண்டும் என அனைவருக்கும் கூறியுள்ளோம். அத்துடன், அரச நிகழ்வுகள் உள்ளிட்ட அனைத்து நிகழ்வுகள் தொடர்பிலும் எம்மிடம் கேட்க வேண்டும் என கூறியுள்ளோம்.

அரசியல் அல்லாத நிகழ்வுகளை எவ்வகையிலும் அரசியலை ஊக்குவிக்காத வகையில் முன்னெடுக்க வேண்டும் என்பதை முக்கியமாகக் கூறியுள்ளோம். அரசியல்வாதிகளின் பங்கேற்பை முடிந்தளவு குறைக்க வேண்டும்.

முக்கியமான நிகழ்வொன்றில் அரசியல்வாதி ஒருவர் பங்கேற்கின்றார் எனின், ஒரு கட்சியிலிருந்து மாத்திரமின்றி ஏனைய கட்சிகளினதும் அரசியல்வாதிகளை அழைக்கும் சம்பிரதாயம் நாட்டில் இருக்க வேண்டும். அரசியல்வாதியொருவருக்கு மலர் மாலை அணிவிக்கப்படுகின்றது எனின், வருகை தரும் அனைவருக்கும் மலர் மாலை அணிவிக்க வேண்டும் என்பதை நேரடியாகவே நாம் கூறியுள்ளோம்

Related posts: