மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ள மருத்துவ அதிகாரிகள் சங்கம்!

Friday, August 30th, 2019


சுகாதார, போசனை, சுதேச மருத்துவ அமைச்சர் ராஜித சேனாரதனவின் தன்னிச்சையான செயற்பாடுகளினால் ஊழல் மோசடி இடம்பெற்று வருவதாக கூறியிருக்கும் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் அவற்றுக்கு உரிய தீர்வை பெற்றுத்தருவதற்கு அரசாங்கத்திற்கு இரண்டு நாட்கள் கால அவகாசம் கொடுத்துள்ளது.

அரசாங்க வைத்தியசாலைகளில் மருந்துத்தட்டுப்பாடு நிலவுகிறமை, மருத்துவக்கல்விக்கான தரத்தில் காணப்படும் குறைபாடு உள்ளிட்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்து தருமாறு கூறி அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் உரிய தரப்பினரிடத்தில் தொடர்ந்தும் கோரிக்கைககளை முன்வைத்து வந்தனர்.

இருப்பினும் அந்த கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு கிடைக்கப் பெறாமையினால் அந்த சங்கத்தினர் கடந்த 22 ஆம் திகதி ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தினை மேற்கொண்டிருந்தனர். ஆயினும் அவர்களுடைய கோரிக்கைகளுக்கான உரிய தீர்வு கிடைக்கப்பெறவில்லை.

இந்த நிலையிலேயே அந்த சங்கத்தினர் எதிர்வரும் இரண்டு நாட்களுக்குள் தமது கோரிக்கைகளுக்கு திர்வு காணா விட்டால் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய செயற்குழு கூட்டத்தில் அரசாங்கத்திற்கு எதிராக கடுமையான தீர்மானம் எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது கலந்து கொண்டு உரையாற்றிய சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அளுத்கே மேற்கண்டவாறு கூறினார்.

Related posts: