மாவின் விலையை அதிகரிக்க அனுமதியளிக்க போவதில்லை – அமைச்சர் பி.ஹெரிசன்!

Tuesday, September 10th, 2019


தனியார் நிறுவனங்களின் கோரிக்கைக்கு அமைய கோதுமை மாவின் விலையை அதிகரிக்க அனுமதி அளிக்க போவது இல்லை என அமைச்சர் பி.ஹெரிசன் தெரிவிதத்துள்ளார்.

அனுராதபுரத்தில் உள்ள ஹுருலுவேவ நீர்ப்பாசன திட்டத்தின் கீழ் உள்ள விவசாய துறையை நவீனமயப்படுத்தும் நிகழ்வில் கலந்துக்கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தனியார் நிறுவனம் ஒன்று சமீபத்தில் ஒரு கிலோ கோதுமை மாவின் விலையை 5 ரூபாவால் கூட்டியது ஆனால் கோதுமைமாவின் விலையை அதிகரிக்க வாழ்க்கைச் செலவு குழுவின் தலைவரான தான் அதற்கு இடமளிக்கவில்லை. இதற்கு முன்னரும் உலக சந்தையில் கோதுமைமாவின் விலை அதிகரிக்கப்பட்டது.

ஆனால் வாழ்க்கைச் செலவுக் குழுவின் முடிவின்படி, நிறுவனங்கள் திரட்டிய தொகையை குறைக்க விலை திருத்தப்பட்டது. அதேபோல் நாளை வாழ்க்கை செலவுக் குழு கூடவுள்ளதுடன் அதில் கோதுமை மாவின் விலை அதிகரிப்பு குறித்து ஆராயப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

அரசாங்கத்தின் அனுமதியின்றி தனியார் நிறுவனங்கள் இவ்வாறான முடிவுகளை எடுப்பதை கண்டிப்பதாக கூறிய அவர் இது தொடர்பில் பொதுமக்கள் சாதகமான முடிவை எடுப்பார்கள் எனவும் கூறினார்.

ஆகவே கூட்டத்தில் எடுக்கும் தீர்மானத்தை அமைச்சரவைக்கு அறிவித்து, ஒரு கிலோ கோதுமை மாவின் நிர்ணய விலையை முடிவு செய்வதாகவும் அமைச்சர் மேலும் கூறினார்.


வறட்சிக்காலநிலை - நீரை விநியோக 260 கோடி ரூபா நிதி!
குடாநாட்டில் இம்முறை மிளகாய் நல்ல விளைச்சல் – விவசாயப் பணிப்பாளர் தெரிவிப்பு!
தொழிலாளர்களுக்கு நிவாரணம் - அமைச்சர் டபிள்யு.டி.ஜே.செனவிரத்ன!
இலங்கையருக்கு அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை!
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் புதிய பணிப்பாளராக நீதிபதி கனிஷ்க விஜேரத்ன நியமனம்!