மருந்து வகைகளின் விலைகள் குறைப்பு – ராஜித சேனாரத்ன!

Monday, August 26th, 2019

இந்த வருட இறுதிக்குள் 27 மருந்து வகைகளின் விலைகள் குறைக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் தலைமையில் மருந்து வகைகளை இறக்குமதி செய்வோர் சங்கத்தின் 18 ஆவது மாநாடு அம்பாந்தோட்டையில் நடைபெற்றது. இதன்படி, 5 ஆயிரம் மருந்து வகைகளின் விலைகள் குறைக்கப்படுவதாகவும் அமைச்சர் கூறினார்.

தரமான உயர் மருந்து வகைகளை பொது மக்களுக்கு வழங்குவதற்கான வேலைத்திட்டத்தை நாம் முன்னெடுத்துள்ளோம் எனவும் இவ் வருடத்தில் எதிர்வரும் காலங்களில் மேலும் 27 மருந்து வகைகளின் விலையை குறைத்து அதன் நன்மைகளை பொது மக்களுக்கு கிடைக்க வழி செய்துள்ளோம் எனவும் சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

Related posts: