மரக்கறிகளின் விலைகளில் வீழ்ச்சி!

Monday, August 5th, 2019

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகளின் விலைகளில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக, மத்திய நிலையத்தின் பொறுப்பாளர் தெரிவித்துள்ளார்.

இதன்படி பீக்கங்காய், பூசணி, கெக்கரிக்காய், புடலங்காய் மற்றும் பாகற்காய் ஆகிய மரக்கறிகளின் மொத்த விலை 10 முதல் 30 ரூபா அளவில் காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேபோன்று மலையகத்திலும் மரக்கறி வகைகளின் விலையிலும் ஒரளவுக்கு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

கோவா ஒரு கிலோ ரூபா 20 ௲ 25 வரையிலும் லீக்ஸ் கிலோ ரூபா 40 வரையிலும் கெரட் கிலோ ரூபா 70 வரையிலும் பீட் கிலோ ரூபா 80 வரையிலும் நுவரெலியாவில் விற்பனை செய்யப்படுவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

Related posts: