மயிலங்காடு கிரம அபிவிருத்திச் சங்கத்தின் கட்டட புனரமைப்பிற்காக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியால் காசோலை வழங்கிவைப்பு!

Tuesday, September 3rd, 2019

ஏழாலை தெற்கு மயிலங்காடு கிரம அபிவிருத்திச் சங்கத்தின் கட்டட புனரமைப்பிற்காக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினால் 90 ஆயிரம் ரூபா நிதிக்கான காசோலை வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

வறிய மக்களது தேவைப்பாடுகளை இனங்கண்டு அப்பிரதேசங்களின் முக்கியமான தேவைப்பாடுகளை பூர்த்தி செய்துவரும் செயற்றிட்டத்தின் பிரகாரம் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி குறித்த கிரம அபிவிருத்திச் சங்கத்திற்கு குறித்த நிதியை வழங்கி வைத்துள்ளது.

குறித்த கிரம அபிவிருத்திச் சங்கத்தின் நிர்வாகத்தினர் கட்சியின் வலிகாமம் தெற்கு பிரதேச நிர்வாகச் செயலாளர் வலன்ரயன் (சந்திரன்) அவர்களிடம் விடுத்திருந்த கோரிக்கைக்கு அமைவாக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களது பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.

இதற்கமைய குறித்த நிதிக்கான காசோலையை கிரம அபிவிருத்திச் சங்கத்தின் நிர்வாகத்தினரிடம் கட்சியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம், கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஸ்னன், மற்றும் குறித்த பிரதேசத்தின் நிர்வாக செயலாளர் வலன்ரயன் ஆகியோர் வழங்கிவைத்திரந்தமை குறிப்பிடத்தக்கது.


Related posts: