மத்திய வங்கி வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

Thursday, October 24th, 2019

Forex Trading எனப்படும் இணையம் ஊடாக மேற்கொள்ளப்படும் பண வர்த்தகம் செய்பவர்களுக்கு இலங்கை மத்திய வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.

அனுமதியின்றி மற்றும் சட்டரீதியற்ற வெளிநாட்டு பண வர்த்தக நடவடிக்கையில் மக்களை ஈடுபடுத்துவதற்கு பல நிறுவனங்கள் முயற்சிப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது.

அவ்வாறு முயற்சிக்கும் நிறுவனங்களின் பிரச்சார விளம்பரங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

அதற்கமைய நீண்ட காலமாக இவ்வாறான நிறுவனங்களினால் மேற்கொள்ளப்படும் பிரச்சாரங்கள் மூலம் பலரின் பணம் பறிக்கப்படுவது தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக வங்கி தெரிவித்துள்ளது. ஆபத்தான நிலையை கருத்திற் கொண்டு அனுமதியற்ற வெளிநாட்டு நிறுவன வர்த்தகங்களில் ஈடுபடுவதனை தவிர்க்குமாறும் மத்திய வங்கி கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.

அவ்வாறு அனுமதியற்ற வெளிநாட்டு கொடுக்கல் வாங்கல்களில் மேற்கொள்ளும் நபர்கள் தொடர்பில் தகவல் கிடைத்தால் இலங்கை மத்திய வங்கியின் அந்நிய செலாவணி திணைக்களத்திடம் அறிவிக்குமாறு இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள விசேட அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts: