மக்கள் வங்கி திருத்த பிரேரணை தொடர்பான விவாத திகதியில் மாற்றம்!

Wednesday, September 11th, 2019

மக்கள் வங்கி (திருத்த) பிரேரணை தொடர்பான நாடாளுமன்ற விவாதம் செப்டம்பர் 19ஆம் திகதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த சர்ச்சைக்குரிய பிரேரணை தொடர்பான விவாதத்தை செப்டம்பர் 4ஆம் திகதி நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில் இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. விவாதத்தை ஒத்திவைக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ சபாநாயகர் கரு ஜெயசூரியவுக்கு கடிதம் எழுதியதையடுத்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த பிரேரணை தொடர்பில் வங்கித் துறையின் பல்வேறு பிரிவுகளிடையே, குறிப்பாக மக்கள் வங்கியின் ஊழியர்கள் மத்தியில் கடுமையான கண்டனங்கள் எழுப்பப்பட்டுள்ளன என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார். இந்த பிரேரணை மக்கள் வங்கியின் ஸ்திரத்தன்மைக்கு நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற கவலைகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இவ்வாறான நிலையிலேயே கட்சித் தலைவர்கள் குறித்த குழு நிலை விவாதத்தையும் பிரேரணை மீதான இறுதி வாக்கெடுப்பையும் 19ஆம் திகதி நடத்த முடிவு செய்துள்ளனர்.

Related posts: