மக்கள் சிந்தித்து செயல்பட வேண்டும் – பவ்ரல்!

Saturday, September 14th, 2019


இலங்கையில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளரை கட்சியே தெரிவு செய்கிறது. இதனால் அந்த வேட்பாளர் நாட்டுக்கு பொருத்தமானவரா என மக்கள் சிந்தித்து செயல்பட வேண்டும் என தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பவ்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராட்சி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த ஜனாதிபதித் தேர்தலில் உள்ள முக்கியமான பெரிய சவால்களில் ஒன்று போட்டியிடும் வேட்பாளர்களில் இருந்து ஒருவரை தெரிவு செய்ய வேண்டும்.

போட்டியிடும் வேட்பாளர்களை தெரிவு செய்வது மக்களல்ல. கட்சியே தெரிவு செய்கிறது. கட்சி வேட்பாளராக நிறுத்துபவரையே மக்கள் தெரிவு செய்ய வேண்டும்.

கட்சி முன்னிறுத்தும் வேட்பாளர் மக்களுக்கு தேவையானவரா என்பது தெரியாது. இது மக்களுக்கு உள்ள பெரிய சவால். தாய்வான் போன்ற நாடுகளில் வேட்பாளரின் தகுதி என்ன, அவருடைய திறமை என்ன, கல்வி நிலை உள்ளிட்ட விபரங்கள் ஒவ்வொரு வாக்களரின்ன் வீட்டுக்கும் அனுப்பப்படும். ஆனால் இங்கு அப்படியில்லை.

கட்சி நியமிப்பவருக்கு தான் நாங்கள் வாக்களிக்கின்றோம். இதனால் சரியான ஒருவரை தெரிவு செய்ய முடியுமா என்ற சவால் மக்களுக்கு இருக்கிறது. கடந்த தேர்தல்களைப் போல் அல்லாது மக்கள் சிந்திக்க வேண்டும். கட்சி என்று பாராது தாம் போடும் வேட்பாளர் யார் என்று பார்க்க வேண்டும்.

அவருக்கு இந்த நாட்டை ஆட்சி செய்யக் கூடிய தகமை இருக்கிறதா?, நாட்டை கொண்டு நடத்தக் கூடிய திறமை இருக்கிறதா?, மக்களின் தலைவராக செயற்படக் கூடியவரா என்று சிந்திக்க வேண்டும். அவ்வாறு வாக்காளர்கள் யோசித்தால் மட்டுமே சரியான ஒரு வேட்பாளரை ஜனாதிபதியாக தெரிவு செய்ய முடியும் எனத் தெரிவித்தார்.

Related posts: