மக்கள் ஒருபோதும் ஏமாற மாட்டார்கள் – நம்பிக்கை தெரிவிக்கும் கோட்டபய ராஜபக்ச!

தனக்கு எதிராக எதிர்க் கட்சிகள் முன்னெடுத்துவரும் சேறு பூசும் நடவடிக்கையை கண்டு மக்கள் ஒருபோதும் ஏமாற மாட்டார்கள் என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சிகள் தங்கள் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளதால் தன் மீது போலி முன்வைத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நொச்சியாகம பகுதியில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இதனை கூறினார்.
இந்த கூட்டத்தில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்பன்பில ஐக்கிய தேசியக் கட்சி தோல்வியால் மனநிலை பாதிப்படைந்து காணப்படுவதாக தெரிவித்தார். இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய கோட்டாபய ராஜபக்ஷ தேர்தல் நேருங்கும் வேளையில் எதிர்க் கட்சிகள் பல போலி குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருவதாக குறிப்பிட்டார்.
தான் பங்கேற்ற அனைத்து பிரச்சார கூட்டங்களிலும் தனது தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பிலேயே பேசியதாகவும், அதன்மூலம் மற்றையவர்கள் மீது சேறு பூசும் கலாச்சாரத்தை ஒழிக்க முயற்சித்தாகவும் அவர் கூறினார்.
அவ்வாறு எதிர்க் கட்சிகள் தனக்கு எதிராக முன்னோரு போதும் இல்லாத அளவிற்கு பொய்களை கூறி வருவதாகவும் எனினும் தற்போதைய வாக்காளர்கள் புத்திசாதுரியமானவர்கள் எனவும் அவர் தெரிவித்தார்.
ஆகவே அவர்கள் பொய்களுக்கு ஏமாறமாட்டார்கள் என தான் நன்கறித்துள்ளதாக தெரிவித்த அவர், தற்போதைய சூழலில் தோல்வியை ஏற்ற மறுக்கும் எதிர்தரப்பினர் தான் இரட்டை குடியுரிமை கொண்டவர் என்று மீண்டும் பிரச்சாரங்களை முன்னெடுப்பதாகவும் குறிப்பிட்டார்.
பெண்களை மேம்படுத்த தனது விஞ்ஞாபனத்தில் பல திட்டங்களை உள்ளடக்கியுள்ளதாகவும் ஆகவே மக்கள் புத்தியோடு செயற்படுவார்கள் என எதிர்ப்பார்பதாகவும் கூறினார்.
பெண்கள் அனைவரும் ஒருமித்து டுநாட்டை மீட்டெடுக்குமாறுடு கோருவதாகவும் அதற்கமைய பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த பல திட்டங்களை முன்னெடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். குறிப்பாக பெண்கள் துஸ்பிரயோகத்தை ஒழிக்க தான் நடவடிக்கை எடுப்பதாகவும் பெண்களுக்கு தனது ஆட்சியில் உரிய ஸ்தானத்தை வழங்குவதாகவும் கோட்டாபய ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.
Related posts:
|
|