போலித் தகவல்: இரு பொலிஸ் அதிகாரிகள் பணிநீக்கம்!

Wednesday, October 9th, 2019


தேசிய பாதுகாப்பு தொடர்பாக போலி மற்றும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் அடங்கிய கடிதங்கள் கொழும்பு நகரிலுள்ள விருந்தகங்கள் சிலவற்றிற்கு அனுப்பபட்டமை தொடர்பில் கொழும்பு கோட்டை காவற்துறை நிலையத்தின் இரண்டு அதிகாரிகள் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

பொலிஸ் ஊடக பேச்சாளரும் காவற்துறை அத்தியட்சருமான ருவண் குணசேகர இதனை தெரிவித்துள்ளார். கொழும்பு கோட்டை காவற்துறையின் நிர்வாக பிரிவு மற்றும் குற்றப்பிரிவு பொறுப்பதிகாரிகளே இவ்வாறு பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் மீண்டும் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படுவதற்கான அபாயம் இருப்பதாகவும், அதனால் வெளிநாடுகளில் இருந்து இலங்கை வந்து விருந்தகங்களில் தங்கியுள்ளவர்களின் விபரங்களை வழங்குமாறும் தெரிவித்து, குறித்த கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த கடிதங்கள் சமுக வலைத்தளங்களிலும் வெளியாகி இருந்தது.

இந்தநிலையில் அதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், அதனுடன் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இருவரும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: