போராட்டங்கள் தொடர்பில் விசேட பேச்சுவார்த்தை !

போராட்டத்தில் ஈடுபடும் தொழிற்சங்கத்தினரின் பிரச்சினைகளுக்கான தீர்வு குறித்து ஆராய நியமிக்கப்பட்டுள்ள அமைச்சரவை உபகுழு, இன்றைய தினம் சம்பந்தப்பட்ட தரப்பினர்களுடன் விசேட பேச்சுவார்த்தையொன்றை மேற்கொள்ள உள்ளது.
அமைச்சர்களான மங்கள சமரவீர, வஜிர அபேவர்த்தன, ராஜித்த சேனாரத்ன உள்ளிட்ட உபகுழு உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபடும் தொடருந்து தொழிற்சங்கத்தினர் மற்றும் கடந்த தினங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட ஏனைய தொழிற்சங்கத்தினருடன் பேச்சுவார்த்தையை மேற்கொள்ளவுள்ளனர்.
இதனிடையே, தொடருந்து தொழிற்சங்கம் உட்பட மேலும் இரண்டு தொழிற்சங்கங்களுடன் இன்று பிற்பகல் பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளதாக குறித்த அமைச்சரவை உப குழுவின் பிரதிநிதியான பதில் போக்குவரத்து அமைச்சர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார.
போராட்டத்தில் ஈடுபட்ட தொடருந்து தொழிற்சங்கத்தினருக்கும், அமைச்சருக்கும் இடையில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற சந்திப்பில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எவ்வாறிருப்பினும், உரிய தீர்வு கிடைக்கும் வரை, தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபடுவதாக தொடருந்து தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
வேதனப் பிரச்சினையை முன்வைத்து தொடருந்து தொழிற்சங்கங்கள் கடந்த 24ஆம் திகதி ஆரம்பித்த போராட்டம் இன்றைய தினம் ஐந்தாவது நாளாகவும் தொடர்வதாக தொடருந்து இயந்திர சாரதிகள் சங்கத்தின் பிரதான செயலாளர் இந்திக்க தொடங்கொட தெரிவித்துள்ளார்
Related posts:
|
|