பொதுச் சொத்து முறைகேட்டை முறையிட இலக்கம் அறிமுகம்!

Wednesday, October 9th, 2019


தேர்தல் பரப்புரை நடவடிக்கைகளின் போது பொதுச்சொத்துக்கள் முறையற்ற விதத்தில் பயன்படுத்தப்படுமாயின் அல்லது முறைகேடு செய்யப்படுமாயின் அது தொடர்பாக முறைப்பாடு செய்வதற்கான அவசர சேவை தொலைபேசி இலக்கங்களை ட்ரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெஷனல் அமைப்பு அறிமுகம் செய்துள்ளது.

இந்த முறைப்பாடுகளை 076-3223662, 076-3223448 ஆகிய தொலைபேசி இலக்கங்களின் ஊடாகவோ அல்லது pppr@tisrilanka.org என்ற மின்னஞ்சல் முகவரியின் ஊடாகவோ மேற்கொள்ள முடியும்.

ட்ரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெஷனல் அமைப்பின் பொதுச் சொத்துக்களைப் பாதுகாத்தல் செயற்திட்டமானது 2006 ஆம் ஆண்டு தொடக்கம் தேர்தல் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடுகின்றது. இந்தக் கண்காணிப்புப் பணிகள் முக்கியமாக பொதுச் சொத்துக்களை மையப்படுத்தியதாகும்.

இந்தமுறை அரச தலைவர் தேர்தலில் பொதுச்சொத்துக்கள் முறைகேடு தொடர்பில் 25 மாவட்டங்களுக்கும் தனித்தனியான கண்காணிப்பாளர்களும், 180 தேர்தல் கண்காணிப்பாளர்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும், அரசியல் கட்சிகளும், அரச அலுவலர்களும் தேர்தல் ஆணைக்குழுவால் வெளியிடப்பட்டுள்ள ஒழுங்கு விதிகளுக்கு அமைவாக செயற்பட வேண்டும். 2141/52 என்ற இலக்கமிடப்பட்ட சிறப்பு அரசிதழ் அறிவித்தல்கள் தொடர்பில் அதிக அவதானம் செலுத்தப்பட வேண்டும் என்றும் ட்ரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெஷனல் அமைப்பு வலியுறுத்தியிருக்கிறது.

Related posts: