பொதுச் சேவைகள் ஆணைக்குழுவில் தொலைபேசி கலந்துரையாடல் விடயம்!

Tuesday, September 24th, 2019


மன்றாடியார் நாயகம் தில்ருக்ஸி டயஸ் விக்கிரமசிங்க, எவென்காட் ஆயுதக்களஞ்சிய நிறுவன பணிப்பாளர் நிசங்க சேனாதிபதியுடன் மேற்கொண்ட தொலைபேசி கலந்துரையாடல் தொடர்பான விடயம் பொதுச்சேவைகள் ஆணைக்குழுவிற்கு பாரப்படுத்தப்பட்டுள்ளது.

சட்டமா அதிபர் தப்புல்ல டி சில்வா இந்த விடயத்தை பொதுச்சேவைகள் ஆணைக்குழுவுக்கு பாரப்படுத்தியுள்ளார்.

அரச பணியாளர் என்ற வகையில் மன்றாடியார் நாயகம் குற்றம் சுமத்தப்பட்ட ஒருவருடன் நடந்து கொண்ட விதத்தை விசாரணை செய்ய வேண்டும் என்ற அடிப்படையிலேயே இந்த விடயம் பொதுச்சேவைகள் ஆணைக்குழுவின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இதேவேளை எவென்காட் விடயம் தொடர்பில் சட்டநடவடிக்கை எடுத்தமைக்கு தாம் வருந்துவதாக மன்றாடியார் நாயகம் தில்ருக்ஸி தெரிவித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: