பொதுக்கணக்கு குழுக்களின் புதிய உறுப்பினர்கள் விரைவில் அறிவிப்பு!

Tuesday, January 28th, 2020


பொது நிறுவகங்களுக்கான நாடாளுமன்ற குழு (கோப்) மற்றும் பொதுக்கணக்கு குழு (கோபா) ஆகியவற்றுக்கான புதிய உறுப்பினர்கள் அறிவிக்கப்படவுள்ளனர்.

நாடாளுமன்ற அமர்வு எதிர்வரும் பெப்ரவரி 5ஆம் திகதி ஆரம்பமாகும்போது இந்த பெயர்கள் சபாநாயகரினால் அறிவிக்கப்படவுள்ளன.

இந்த பெயர்கள் தொடர்பான பரிந்துரைகள் ஏற்கனவே சபாநாயகருக்கு கிடைத்துள்ளன. இந்த நிலையில் தற்போது அதனை ஆராயும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

எனவே அடுத்த அமர்வின்போது இந்த குழுக்களுக்கான உறுப்பினர்கள் அறிவிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த நாடாளுமன்றத்தில் கோப் குழுவின் தலைவராக ஜே.வி.பியின் சுனில் ஹந்துன்நெந்தியும், கோபா குழுவின் தலைவராக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் லசந்த அழகியவன்னவும் செயற்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: