பேக்கரி பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்கள் பொது மக்களுக்கு வட் வரி சலுகையை பெற்றுக் கொடுப்பதில்லை!

பேக்கரி பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்கள் பொது மக்களுக்கு வெட் வரி சலுகையை பெற்றுக்கொடுப்பது இல்லை என உள்நாட்டு வருமான வரி திணைக்களம் தெரிவித்துள்ளது.
வெட் வரி சலுகை பொது மக்களுக்கு பெற்றுக்கொடுக்கப்படுவதில்லை என கிடைத்துள்ள முறைப்பாடுகளுக்கு அமைய நடத்தப்பட்ட ஆய்வில் இந்த விடயம் தெரியவந்துள்ளதாக உள்நாட்டு வருமான வரி திணைக்கள ஆணையாளர் நாயகம் நாதுன் கமகே தெரிவித்துள்ளார்.
ஆகவே பொது மக்களுக்கு வரி நிவாரணம் வழங்காத நிறுவனங்கள் மீது வெட் வரி சட்டத்தின் கீழ் அதிகபட்ச தண்டனையை வழங்க நடவடிக்கை எடுப்பதாக உள்நாட்டு வருமான வரி திணைக்கள ஆணையாளர் நாயகம் நாதுன் கமகே மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
ஜனாதிபதியின் செயலாளர் பதவிக்கு ஒஸ்டின் பெர்ணாண்டோ நியமனம்!
உலகத் தரம்வாய்ந்த நிலைக்கு தபால்துறையை கொண்டு செல்ல வேண்டும் – ஜனாதிபதி வலியுறுத்து!
விவசாயிகளுக்கு உரம் கொள்வனவு செய்வதற்கு தேவையான பணம் இன்றுமுதல் அவர்களின் கணக்குகளில் வைப்பிலிடப்படு...
|
|