பெரமுனவின் முதலாவது பரப்புரை கூட்டம் அனுராதபுரவில் இன்று !

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ச தனது தேர்தல் பரப்புரையை இன்று அனுராதபுரவில் ஆரம்பிக்கவுள்ளார்.
அனுராதபுர சல்காடோ மைதானத்தில் கோத்தாபய ராஜபக்சவின் முதலாவது அதிபர் தேர்தல் பரப்புரைக் கூட்டம் இன்று பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமாகும். இதில் மகிந்த ராஜபக்ச மற்றும் பொதுஜன பெரமுன மற்றும் பங்காளிக் கட்சித் தலைவர்கள், பங்கேற்கின்றனர்.
இந்த தேர்தல் மேடையில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பல பிரதிநிதிகளும் கோத்தாபய ராஜபக்சவுடன் இணைந்து கொள்ளவுள்ளனர் என தெரியவருகின்றது.
இதையடுத்து, வடக்கு, கிழக்கு உள்ளிட்ட பகுதிகளில், தேர்தல் தொகுதி மட்டத்தில் 138 பரப்புரைக் கூட்டங்களிலும், 26 மாவட்ட மட்டத்திலான கூட்டங்களிலும், கோத்தாபய ராஜபக்ச பங்கேற்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
பொலிஸ் அதிகாரிகள் பலர் இடமாற்றம்!
ஈ.பி.டி.பி உறுப்பினர் மீது தாக்குதல்: வலி.வடக்கு பிரதேச சபை தவிசாளர் சுகிர்தன் அடாவடி – பொலிஸ் நில...
இலங்கை - எகிப்து இடையே பொருளாதார செயற்பாடுகளை மேம்படுத்த நடவடிக்கை!
|
|