பெயர் இல்லை என்றால் 19 ஆம் திகதிக்கு முன்னர் அறிவிக்கவும் – தேர்தல்கள் ஆணைக்குழு!

Monday, September 9th, 2019

2019 ஆண்டின் தேருனர் இடாப்பில் உங்களது பெயர் உள்ளதா என்பது தொடர்பில் ஆராயுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு பொதுமக்களை கோரியுள்ளது.

தங்களது அலுவலரிடம் அல்லது தேர்தல்கள் ஆணைக்குழுவின் இணையத்தளத்தில் இது தொடர்பில் அறிந்து கொள்ள முடியும் என அந்த ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

அவ்வாறு தேருனர் இடாப்பில் உங்களது பெயர் இல்லை என்றால் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 19 ஆம் திகதிக்கு முன்னர் இது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: