பெண் மருத்துவரை பாலியல் துஷ்பிரயோகம்: நால்வர் சுட்டுக்கொலை!

Friday, December 6th, 2019


ஹைதராபாத் கால்நடை பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து எரித்து கொலை செய்த சம்பத்தில் கைது செய்யப்பட்ட 4 நான்கு சந்தேகநபர்களும் இன்று அதிகாலை சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த பெண் மருத்துவர் எரித்து கொலை செய்யப்பட்ட இடத்திலேயே குறித்த நான்கு சந்தேகநபர்களும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தெலுங்கானா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பெண் மருத்துவர் எரித்து கொலை செய்யப்பட்ட பாலத்திற்கு அடியில் கொலையை எவ்வாறு செய்ததாக சந்தேகநபர்கள் நடித்து காட்டிய போது தப்பிச் செல்ல முயற்சித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது, பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் குறித்த நான்கு சந்தேகநபர்களும் உயிரிழந்துள்ளதாக தெலுங்கானா செய்திகள் தெரிவிக்கின்றன.

Related posts: