பெண்கள் குழந்தைகள் தொடர்பில் விசேட அவதானம் தேவை – ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ!

Sunday, September 1st, 2019


நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் போது பெண்கள் மற்றும் குழந்தைகள் தொடர்பில் விசேட அவதானம் செலுத்தி செயற்பட வேண்டும் என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முதலாவது மகளிர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முதலாவது மகளிர் மாநாடு தற்போது கொழும்பில் இடம்பெற்று வருகிறது.

அவர் மேலும் உரையாற்றுகையில், இன்று நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்முறை மற்றும் சிறுவர் குற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், பொது போக்குவரத்திலேனும் பெண்களுக்கு சுதந்திரமாக செல்ல முடியாது நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலைமையை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும். பெண்களின் கௌரவத்தினை பாதுகாத்து ஒழுக்கமான, நெறிமுறை நிறைந்த சமூகம் ஒன்றினை கட்டியெழுப்பு வேண்டும்.

நாட்டின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் போது பெண்கள் மற்றும் குழந்தைகள் தொடர்பில் விசேட அவதானம் தேவை. சிறுவர் குற்றங்கள் தொடர்பான வழக்குகளை விரைவாக நிறைவுக்கு கொண்டு வர விசேட பொறிமுறையொன்றை உருவாக்க வேண்டும்.

அதேபோல், நாட்டினுள் கடந்த காலத்தில் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளதால், விசேடமாக இதில் பெண்களே அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.  பல வருடமாக காணப்படும் இந்த பிரச்சினையை தீர்க்க உரிய பாதுகாப்பு செயற்பாடுகள் மேற்கொள்ளப்படவில்லை,

இதன் காரணமாக, தேசிய நலன் சார்ந்த விடயமாக இதனை கருதி உடனடியாக போதைப்பொருளை ஒழிக்க நடவடிக்கை எடுக்க உறுதியளிப்பதாக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்திருந்தார்.

Related posts: