புலம்பெயர் தேச இலங்கையர்களிடம் ஜனாதிபதி விடுத்துள்ள கோரிக்கை!

Wednesday, September 18th, 2019


புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தொழில்சார் நிபுணர்களை மீண்டும் நாட்டுக்கு கொண்டு வருவதற்கும் திட்டமிடப்பட்ட முறையொன்று அவசியமாகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

கல்விமான்கள் நாட்டை விட்டுச் செல்வதை தடுப்பதற்கும் வெளிநாடுகளில் வசிக்கும் தொழில்சார் நிபுணர்களை நாட்டுக்கு கொண்டு வருவதற்கான முன்மொழிவினை உரிய தரப்பிடமிருந்து எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொறியியலாளர்கள், வைத்தியர்கள் மற்றும் தொழில்சார் நிபுணர்கள் நாட்டை விட்டுச்செல்லுதல் நாட்டின் அபிவிருத்திக்கு பாரிய சவாலாகும். சுதந்திரமான ஜனநாயக நாடு என்ற வகையில் எந்தவொரு நபருக்கும் எவ்வித எல்லைகளும் விதிக்கப்படவில்லையாயினும் நாட்டுக்கான தமது பொறுப்பினை அனைவரும் புரிந்து செயற்பட வேண்டும்.

பிரச்சினைகள் காணப்பட்ட போதிலும் அவற்றைத் தீர்த்து குறுகிய காலத்திற்காவது தமது தாய்நாட்டிற்காகவும் மக்களுக்காகவும் சேவையாற்ற வேண்டியது கல்விமான்களின் பொறுப்பாகும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

கொழும்பில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் ஜனாதிபதி உரையாற்றினார். இதன்போது இந்தக் கருத்துக்களை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: