புகையிரத நிலையங்களில் பொதுக் கழிப்பறைகள் – நிதி அமைச்சு!

Friday, October 11th, 2019


புகையிரத நிலையங்களில் பொதுக்கழிப்பறைகள் அமைக்கப்படவுள்ளதாகவும் இந்த வருட பாதீட்டில் மேற்கொள்ளப்பட்ட ஒதுக்கீட்டின் படியே இந்த கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

பொல்கஹாவல, ரம்புக்கனை, ஹட்டன், புத்தளம், சிலாபம், திருகோணமலை, மட்டக்களப்பு, ஆகிய புகையிரத நிலையங்களிலேயே இந்த கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனை தவிர கடுகன்னாவ, பேராதெனிய, ஜாஎல ஆகியபுகையிரத நிலையங்களில் 9.3 மில்லியன் ஒதுக்கீட்டில் கழிப்பறைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

பாதீட்டில் பேருந்து நிலையங்கள் மற்றும் புகையிரத நிலையங்களில் கழிப்பறைகளை அமைக்க அரசாங்கம் 1 பில்லியன் ரூபாய்களை ஒதுக்கீடு செய்துள்ளது.

Related posts:


வட மாகாணத்தில் மலேரியா தொற்று அதிகரிக்கும் அபாயம் - பிராந்திய மலேரியா தடை இயக்க பொறுப்பு வைத்திய அத...
சமையல் எரி வாயு விநியோகம் நாளை முதல் வழமை போன்று நடைபெறும் - லிற்றோ காஸ் நிறுவனத்தின் தலைவர் அறிவிப்...
கர்ப்பிணித்தாய் படகில் பிரசவித்த சம்பவம் தொடர்பாக தெளிவுபடுத்தியது யாழ்ப்பாணப் பிராந்திய சுகாதார சேவ...