பிரதமரை அழைக்க திட்டமிடும் ஜனாதிபதி ஆணைக்குழு!

Saturday, September 7th, 2019


விவசாய அமைச்சுக்கு கட்டடமொன்று பெற்றுக்கொள்ளப்பட்டமை தொடர்பில் முன்னாள் விவசாயத்துறை அமைச்சர் துமிந்த திஸாநாயக்கவிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட நிலையில் பிரதமரிடம் வாக்கு மூலம் பெற திட்டமிடப்பட்டுள்ளது.

முன்னதாக இடம்பெற்ற விசாரணைகளில் கிடைக்கப் பெற்ற சாட்சியங்களின் அடிப்படையில் பிரதமரிடம் வாக்குமூலம் பெறுவதற்கு எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ஆணைக்குழுவின் அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை மேலதிக விசாரணைகளுக்காக எதிர்வரும் 10ஆம் திகதி மீண்டும் ஆணைக்குழுவில் ஆஜராக, நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்கவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

2015 முதல் 2018ஆம் ஆண்டு வரை அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள விசேட ஜனாதிபதி ஆணைக்குழு அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: