பாதுகாப்பை உறுதி செய்வது இராணுவத்தின் பொறுப்பு – இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா!

Saturday, September 28th, 2019


நாட்டினதும், பொதுமக்களினதும் பாதுகாப்பை உறுதி செய்வது இராணுவத்தின் பொறுப்பாகும் என்றும் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டிருப்பதாகவும் இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

ஒக்டோபர் மாதம் 10 ஆம் திகதி இடம்பெறவுள்ள இராணுவத்தின் 70 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு தலதா மாளிகையில் மத வழிபாட்டு நிகழ்வை இராணுவம் ஏற்பாடு செய்திருந்தது. இந்த வழிபாடு ஒவ்வொரு வருடமும் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: