பாதுகாப்பு குறித்த அதி விசேட வர்த்தமானி வெளியீடு!

Sunday, November 24th, 2019


நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் பொதுமக்களின் பாதுகாப்பை தொடர்ந்தும் பேணும் நோக்குடன் இராணுவத்தினரை கடமையில் ஈடுபடுத்துவது குறித்த அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கையெழுத்துடன் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் பிறப்பிக்கப்பட்ட அவசர கால சட்டத்தை நீக்கியதன் பின்னர் பொதுமக்களின் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் ஜனாதிபதியால் நாட்டினுள் அமைதியைக் காக்கும் பொருட்டு இராணுவம், கடற்படை மற்றும் விமானப் படையினர் அழைக்கப்பட்டுள்ளனர்.

இந்த சட்டத்தின் கீழ் ஜனாதிபதிக்கு கிடைத்துள்ள அதிகாரங்களின் ஊடாக 25 நிர்வாக மாவட்டத்தினுள்ளும் பொதுமக்களின் பாதுகாப்பை தொடர்ந்தும் பேணும் நோக்குடன் முப்படை உறுப்பினர்களை ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறித்த அதிவிசேட வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts: