பளை வைத்தியர் விவகாரம்: வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது – பொலிஸ் பேச்சாளர்!

Friday, August 30th, 2019


பளை வைத்திய அதிகாரி உள்ளிட்ட ஏழு பேரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில், பிரமுகர் படுகொலை சதி தொடர்பான தகவல்களை வெளியிட்டதாக வெளியான செய்திகளில் உண்மையில்லையென பொலிஸ் பேச்சாளர் ருவான் குணசேகர மறுத்துள்ளார்.

பளை வைத்தியசாலை பொறுப்பு வைத்திய அதிகாரி சி.சிவரூபன் அண்மையில் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்dஇருந்ததை அடுத்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மேலும் ஆறு பேர் கைதாகியிருந்தனர்.

அத்துடன், வைத்திய அதிகாரியிடமிருந்து துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களையும் பொலிசார் மீட்டதாக பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

சின்னாமணி தனேஷ்வரன், ரத்னம் கிருஷ்ணராஜா, மோகனசுந்தரம் சின்னதுரை, வினயகமூர்த்தி நெஜிலன் ஆகியோர் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வந்த நிலையில், நேற்றிரவு டி.எம். நிமலராஜ் மற்றும் ரூபன் ஜதுசன் ஆகியோர் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்நிலையில் கைதுசெய்யப்பட்டவர்களிடம் பயங்கரவாத புலனாய்வு பிரிவு விசாரணை செய்து வருவதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

எனினும் , விசாரணைகளின் போது , மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ, டக்ளஸ் தேவானந்தா, கருணா ஆகியோரின் படுகொலை சதி குறித்து அவர்கள் எந்த தகவலையும் வெளியிடவில்லை என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: