பல்கலைக்கழக ஊழியர்கள் போராட்டம்!
Friday, September 20th, 2019யாழ் பல்கலைக்கழக ஊழியர்கள் இன்று பலாலி வீதியில் பேரணியொன்றை முன்னெடுத்துள்ளனர்.
யாழ் பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் அரசியல்ரீதியான வேலைவாய்ப்பை நிறுத்த வலியுறுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் ஏற்பாட்டில் பல்கலைக்கழகத்திற்கு முன்பாக தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை ஊழியர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக, இன்று யாழ் பல்கலைக்கழக வளாகத்திற்குள் இருந்து பேரணியாக சென்ற ஊழியர்கள் பிரதான நுழைவாயிலை வந்தடைந்தது, அங்கிருந்து தொடர்ந்து பரமேஸ்வரா சந்திக்கு சென்று பலாலி வீதியின் நடுவில் நின்று தமது அடையாள போராட்டத்தை நடத்தியுள்ளனர்.
சுமார் அரைமணி நேரம் வீதியின் நடுவில் நின்று போராட்டம் நடத்தியதால் பலாலி வீதி போக்குவரத்தில் சிறிது நேரம் நெருக்கடி ஏற்பட்டிருந்தது.
அதன் பின்னர் அங்கிருந்து சென்ற ஊழியகள் பல்கலைகழகத்தின் முன்புறமாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|