பறவை மோதி விபத்து: 146 பயணிகளுடன் தரையிங்கிய விமானம்!

Tuesday, September 17th, 2019


இலங்கையிலிருந்து திருச்சி நோக்கி சென்ற ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்றில் பறவை மோதியதால் ஏற்படவிருந்த விபத்து தவிரக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த விமானம் 146 பயணிகளுடன் பாதுகாப்பாக தரையிறங்கியதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த ஞாயிற்று கிழமை குறித்த விமானம் திருச்சி நோக்கி சென்றுள்ளது.

காலை 8.40 மணிக்கு தரையிறங்க வேண்டிய குறித்த விமானத்தின் இடதுபக்க இயந்திரத்தில் பறவை மோதி பழுது ஏற்பட்டது. இதனையடுத்து, அந்த விமானம் 146 பயணிகளுடன் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது.

இந்நிலையில், குறித்த விமானம் சீர் செய்யப்பட்டு மீண்டும் 40 பயணிகளுடன், இலங்கை திரும்பியுள்ளதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இலங்கையிலிருந்து பிரத்தியேக விமானம் மூலம் திருச்சி சென்ற தொழில்நுட்ப வல்லுநர்கள் விமானத்தில் ஏற்பட்டிருந்த கோளாறை இரவோடு இரவாக சரி செய்த நிலையில், அந்த விமானம் மீண்டும் இலங்கைக்கு திரும்பியுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: