பரீட்சைகளுக்கான மேலதிக பாடப்புத்தகங்கள் வெளியீட்டு திணைக்களத்தில்!

Tuesday, August 20th, 2019


க.பொ.த சாதாரண தர மற்றும் உயர்தர பரீட்சைகளுக்கான மேலதிக பாடப்புத்தகங்களை வெளியீட்டு திணைக்களத்தில் தற்போது பெற்றுக்கொள்ள முடியும் என கல்வியமைச்சின் வெளியீட்டு பிரிவின் ஆணையாளர் பத்மினி நாலிக்கா வெலிவத்த தெரிவித்துள்ளார்.

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் வினா-விடை தொகுப்புகளையும் இங்கு பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அடுத்த வருடத்திற்கான பாடசாலை பாடப்புத்தகங்கள் வழங்கும் நடவடிக்கை மாகாண மட்டத்தில் தற்போது முன்னெடுக்கப்படுவதாக வெளியீட்டு பிரிவின் பணிப்பாளர் தெரிவத்துள்ளார்.

Related posts: