பரவலாக மழையுடனான வானிலை தொடரும் – வளிமண்டலவியல் திணைக்களம்!

நாட்டில் பரவலாக மழையுடனான வானிலை தொடர்ந்தும் சில நாட்களுக்கு நீடிக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
குறிப்பாக மேல், சப்ரகமுவ, தென், மத்திய, வடமேல் மாகாணங்களில் தொடர்ச்சியாக மழையுடனான வானிலை நிலவும். மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் 100மில்லிமீற்றர் அளவில் மழை பெய்யக்கூடும்.
அதேநேரம் யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்டங்களில் காலை வேளையிலும் மழை பெய்யும் என்று கூறப்படுகிறது.
இடிமின்னல் மற்றும் தற்காலிக கடும் காற்று என்பவற்றில் இருந்து தற்காத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேநேரம், நுவரெலியா, இரத்தினபுரி, களுத்துறை மற்றும் கேகாலை ஆகிய நான்கு மாவட்டங்களிலும் மண்சரிவு அபாயம் நிலவுவதாக தேசிய கட்டிட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது.
அதேநேரம், களனி மற்றும் மில்லகந்தை நதிகளின் நீர்மட்டம் தொடர்ச்சியாக அதிகரித்து வருவதாக, அனர்த்த முகாமை மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதனால் சில இடங்களில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே நீர்மட்டம் அதிகரித்திருந்த அத்தனகல மற்றும் நில்வலா கங்கைகளின் நீர்மட்டம் தற்போது குறைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
Related posts:
|
|