பணிப்புறக்கணிப்பினை கைவிட தொழிற்சங்கங்கள் தீர்மானம்!

ரயில் சேவையானது அத்தியாவசிய சேவையாக அறிவிக்கப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் கடந்தவாரம் வெளியிடப்பட்டுள்ளது.
எனினும் இன்றையதினம் தொடர்ந்தும் 12 ஆவது நாளாகவும் ரயில்வே தொழிற்சங்கங்களின் போராட்டம் தொடர்ந்த வண்ணமே உள்ளது.
இந்நிலையில், ஜனாதிபதியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் பணிப்புறக்கணிப்பினை நிறைவு செய்ய தீர்மானித்துள்ளதாக ரயில்வே தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
இதேவேளை தேர்தல்காலங்களில் இவ்வாறான பணிப்பகிஷ்கரிப்பு போராட்டங்களில் ஈடுபடாது ஒத்துழைப்புகளை வழங்க வேண்டுமென சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய ஏற்கனவே கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மாணவிகளுக்கு தொல்லை கொடுப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை!
அவசர கால சட்டத்தை மேலும் ஒரு மாதம் நீடிக்கும்!
கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இலங்கையை சுரண்டுவோ, சட்டவிரோத நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தவோ எவருக்கு...
|
|